Monday, January 16, 2017

பொங்கல் 2017

இந்த வருஷ பொங்கல் ஸ்பெஷல் கோலங்கள்...!  


கோலங்கள் கோவையில் அம்மா வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் போடப்பட்டவை. வாட்ஸப் உபயத்தில் சுடச்சுட அமெரிக்கா வந்த கோலங்கள் இப்ப இங்கேயும் வந்தாச்சு! :) 
~~~~~
அறுவடைத் திருநாளுக்கு எங்க வீட்டுத் தோட்ட அறுவடை..கத்தரிக்காய், ப்ரோக்கலி, எலுமிச்சை,  ஒரு தக்காளி, இரண்டு குட்டிப் பழ மிளகாய்கள்! :)))  + சர்க்கரைப் பொங்கல் & வெண்பொங்கல்!  
சாமி கும்பிடும் குட்டிச்சாமி!! ;) 
 நீங்க எல்லாரும் சந்தோஷமா பொங்கல் கொண்டாடி இருப்பீங்க என்று நினைக்கிறேன். அடுத்த பதிவில் சந்திக்கலாம்..நன்றி! 

14 comments:

  1. தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி அண்ணா!

      Delete
  2. ////கோலங்கள் கோவையில் அம்மா வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் போடப்பட்டவை. வாட்ஸப் உபயத்தில் சுடச்சுட அமெரிக்கா வந்த கோலங்கள் இப்ப இங்கேயும் வந்தாச்சு! :) //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உண்மையில், லயா குட்டியை வீட்டில் வச்சுக்கொண்டு இவ்ளோ கோலம் போட்டிருக்கிறீங்களே... கிரேட் தான் என நினைச்சுட்டேன் ஒரு கணம் கர்ர்ர்ர்ர்ர்ர் ஏமாத்திட்டீங்க:)

    ReplyDelete
    Replies
    1. கி கி கி!! பூஸை ஏமாத்தினா ஒரு ஸ்பெஷல் சந்தோஷம்தான்! ;) :)

      Delete
  3. வீட்டுத் தோட்டத்தில் பறித்ததோ சூப்பர் மகி... உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.. லயா உயர்ந்திட்டா நல்லாவே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதிரா! நீங்களும் பொங்கல் சூப்பரா கொண்டாடிருப்பீங்க..தாமதமா நன்றி சொல்றேன்..அஜீஸ் பண்ணிகுங்க. லயாவுக்கென்ன, அது கிடுகிடுனு உசந்துகிட்டே இருக்கு...அவ்வ்வ்வ்!!

      Delete
  4. ஹா ஹா :)) ஏதோ தேர்வுக்குத் தயாராவதுபோல் முதல் நாள் இரவே கோலத்துக்குண்டான அனைத்தையும் உள்வாங்கி, மறந்துபோய்கூட பேப்பரைப் பார்த்து காப்பி அடிக்காமல் போட்ட காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

    உங்க வீட்டு கோலம்னே நெனச்சிட்டேன். ஹ்ம்ம்ம்ம் ??? ப்ரோக்கலி இங்கே வந்திருக்கு ! அறுவடை படு ஜோர். அக்கா என்ன வேண்டிக்கிறாங்க :))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சித்ராக்கா..அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..மொமெண்ட்தான்!! :)
      //என்ன வேண்டிக்கிறாங்க :))// அம்மாவுக்கு இன்னும் எப்படியெல்லாம் தொந்தரவு குடுக்கலாம்னு ஐடியா கொடு சாமி-நு வேண்டிருப்பாங்க!! ;) :)

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ராக்கா!

      Delete
  5. ///கோலங்கள் கோவையில் அம்மா வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் போடப்பட்டவை.// அது தானே பார்த்தேன். அவ்வளவு நேரம் இருந்து கோலம் போடுறது இப்ப ஈஸியா இருக்காதே!

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்!! இப்படி சாணி போட்டு மெழுகி கோலம் போட இங்க ஏது வழி??! வருஷத்துக்கொரு முறை இப்படி கோலங்களை ஃபோட்டோல பாத்துக்கிறதுதான் இமா!! :)

      Delete
  6. கோலங்கள் அருமை.
    அந்தச் சாமி மேடை அழகா இருக்கு. இந்தியாவிலிருந்து வாங்கி வந்ததா?

    ReplyDelete
    Replies
    1. சாமி மேடை - இங்கே ஒரு ஃப்ரெண்ட் ப்ரசெண்ட் செய்தது இமா! அது மேடை இல்ல, குட்டி சேர்..சேர் முழுக்க சாப்பிடற பண்டங்கள் வைச்சு அடுக்கி பேக் செய்து இருந்தது. ;) :)))

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails