Thursday, March 5, 2015

முள்ளங்கி குழம்பு

தேவையான பொருட்கள்
முள்ளங்கி-1(சிறியதாக)
வெங்காயம்-பாதி
பச்சைமிளகாய்-1
தக்காளி-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
கொத்துமல்லி இலை- கொஞ்சம்
எண்ணெய்
உப்பு
அரைக்க
தேங்காய்த் துருவல்-2 டேபிள்ஸ்பூன்
சோம்பு-1/2டீஸ்பூன்
வரமிளகாய்-3(காரத்துக்கேற்ப)

செய்முறை
முள்ளங்கியை கழுவி வட்டத்துண்டங்களாக நறுக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மைய அரைத்துவைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயம்-பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
முள்ளங்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைத்த தேங்காய்க்கலவையைச் சேர்த்து..
தேவையான நீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் தெளிந்து வந்ததும்,
கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான முள்ளங்கி குழம்பு தயார். இட்லி தோசைக்கு அருமையாக இருக்கும். சாதத்துடனும் சாப்பிடலாம். சோம்பு சேர்ப்பதால் லேசான இனிப்பு சுவையுடனும் நல்ல வாசத்துடனும் இருக்கும். 

10 comments:

  1. முள்ளங்கி குழம்பு சூப்பர் ஈசியாக இருக்கு..

    ReplyDelete
  2. முள்ளங்கி குழம்பு சூப்பர் ஈசியாக இருக்கு..

    ReplyDelete
  3. நேற்றுத்தான் முள்ளங்கியை என்ன செய்யலாம் என யோசித்து, பின் பொரியல் ஆக்கிட்டேன். முள்ளங்கின்னா சாம்பார்ன்னு ஆகிபோச்சு.
    இன்னொருதரம் வாங்கி உங்க குழம்பையும் செய்துபார்க்கிறேன். அரைச்சுவைப்பதால் டேஸ்டியா இருக்கும்.-நன்றி மகி.-

    ReplyDelete
  4. எனக்கு மிகவும் பிடித்த உணவு ..........yummy

    ReplyDelete
  5. முள்ளங்கி சாம்பார் செய்து விட்டு இப்பத்தான் லேப்பை ஓபன் பண்ணினேன்... இங்க முள்ளங்கி குழம்பு . முள்ளங்கி இரண்டு மீதி உள்ளது. அடுத்த முறை செய்து பார்க்கிறேன். ரொம்ப சிம்பிளா இருக்கு மகி. லயா குட்டியும் ஜீனோவும் எப்பிடி இருக்காங்க..:)

    ReplyDelete
  6. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் நிச்சயம் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வித்தியாசமா வச்சிருக்கீங்க. முள்ளங்கி சாம்பாரில் நாங்களும் பெருஞ்சீரகம் சேர்ப்போம், ஆனால் தாளிக்கும்போது. நாளைக்கு சந்தைக்குப் போய் வாங்கிவந்து வைக்கிறேன் மகி.

    ReplyDelete
  8. கலர்புல் குழம்பு, பார்க்கும்போதே இட்லி, தோசை நினைக்க வைக்கிறது.

    ReplyDelete
  9. // சோம்பு சேர்ப்பதால் லேசான இனிப்பு சுவையுடனும் நல்ல வாசத்துடனும் இருக்கும். // பேசாம சோம்புக்கு பதிலா கால் கிலோ சீனி போட்டுடலாமே #டவுட்டு ;)

    ReplyDelete
  10. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்!
    @ராதாராணி, லயா-ஜீனோ இருவரும் நலமே! விசாரித்ததற்கு நன்றிகள்! உங்க ஸ்கூபி எப்படி இருக்கார்? :)
    @#டவுட்டு அண்ணே, //பேசாம சோம்புக்கு பதிலா கால் கிலோ சீனி போட்டுடலாமே #டவுட்டு ;)// சீனி வேணாம், வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டுக்குங்க, உடம்புக்கு ரெம்ம்ம்ம்ம்ம்ப நல்லது! ;) :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails