Thursday, February 26, 2015

பூ பூத்தாச்சு... :)

கடந்த கோடையில் புதிதாக அன்புப் பரிசு வடிவில் வீட்டுக்கு வந்த ஜாதிமல்லி ..
அரும்பு கட்டி, மொட்டாகிப் பூத்தும் விட்டாள்!! :) 
2013-ல் மூன்று நிறங்களில் வாங்கிவந்த ஜெரேனியம் மலர்களில் தங்கித் தழைத்தது இந்த ஒன்று மட்டுமே..முதல் கொத்து மலர்கள் ஆன் த வே! :) 
போன வருஷம் வாங்கிய வயோலாச் செடிகளின் விதை தானாக விழுந்து இந்த வருடம் எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை வழங்கியது. பெரிய தொட்டியில் ஓரு ஓரத்தில் இந்தம்மா இருப்பதால் அத்தொட்டியில் வேறு செடிகள் நடலாமா வேண்டாமா என மனம் அலைபாய்கிறது. கார்டன் எக்ஸ்பர்ட்ஸ்..அட்வைஸ் ப்ளீஸ்! :) 
கதவைத் திறந்த உடனே கம்மென்று அசத்தும் மணத்துடன் இந்த அழகுப்பூக்கள்..
வெய்யிலில் குளித்து அழகு வண்ணங்கள் காட்டி..
நீலவானப் பின்னணியில் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இந்தப் பூக்கள் என்ன பூக்கள்? எட்டியெட்டிப் படம்பிடித்தாலும் சைட் போஸ் மட்டுமே தெரிகின்றனவே??!
பெரிய கேமராவை வைத்துவிட்டு ஐஃபோனில் சுட்ட ஒரு படத்தில் பூ பூத்திருச்சுங்க...
இது என்ன பூ? என்பது அப்படியொன்றும் கடினமான கேள்வியில்லை..இருந்தாலும் கேட்டு வைக்கிறேன். அறிந்தோர் நேரமனுபதிப்பின், கருத்துப்பெட்டியில் பதியுங்க..பதில் கண்டபின் அடுத்த படத்தை இணைக்கிறேன். நன்றி!
எலுமிச்சை மரத்தின் மலர்கள்தான் அவை..சரியாகக் கணித்தவர்களுக்கு பழம் பழுத்ததும் ஒரு பழம் அனுப்புகிறேன். ஹிஹி...மொத்தமே 4 பிஞ்சுகள்தான் வெற்றிகரமாக வளர்ந்துவருகின்றன. இப்போது மலரும் மலர்கள் பழமானால் ஆளுக்கொரு டஜன் பழம் கூட அனுப்பிருவேன். காத்திருந்து பார்க்கலாம்..:)
நன்றி..நன்றி!

Tuesday, February 10, 2015

ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது?..

ஜனவரி மாதத்தில் ஒரு முற்பகல் நேரமும், முன்னிரவு நேரமும் இந்தப் பகிர்வில்..
நீல வானிலே வெள்ளி ஓடைகள்..
போடுகின்றதே என்ன ஜாடைகள்?..

விண்வெளியில் இறைத்தது யார், பல நிறங்கள்??..
வானமா..மேகங்களா..கதிரோனா?..
அல்லது
மேகங்களைக் கலைத்து விளையாடும் காற்றா?
மரச்செறிவா...மலைச்சரிவாலா?... 
யாரால் வந்தது??..
இப்படிக் கண்களைக் கவர்ந்து,
 கை வேலையை விட்டு
சில நிமிஷங்களேனும்
 இந்தக் காட்சியை மாலைத் தேநீருடன் சேர்த்துப் பருகுவோம் எனும்
இச்சை மூட்டும் அழகு???
~~~
லயா : அம்மா அண்ணாந்து கலர் பாத்துகிட்டு என் டிரெஸ்ஸ இப்படி கலர் கலரா போட்டு விட்டுட்டாங்க..நானா கேக்க இன்னுங் கொஞ்சம் நாளாகும்..நீங்க எல்லாருமாவது "என்ன?'-ன்னு ஒரு வார்த்தை கேளுங்களேன்!!! :)
"லயாவுக்கு எந்த டிரெஸ், எந்தக் கலர்ல போட்டாலும் நல்லா இருக்கும்!" அப்படின்னு வேற ரெண்டு பேரும் பேசிக்கிறாங்க..அவ்வ்வ்வ்வ்வ்! எ.கொ.ச.இ.?? ஆள விடுங்க சாமீஈஈ..மீ த எஸ்கேப்பூ! ;) :)

LinkWithin

Related Posts with Thumbnails