Sunday, June 29, 2014

பத்து கேள்விக்குப் பதில்! ;) :)

முக்கியமான முன்குறிப்பு
இந்த பத்து பதில்களில் பெரும்பாலானவை நகைச்சுவையை மனதில் கொண்டு எழுதப்பட்டவை. யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை! எல்லாருமே சீரியஸாவே பதில் சொல்லிட்டு இருக்காங்க, அதான் நாம கொஞ்சம் காமெடியா எழுதலாமேன்னு...ஹிஹி!

1. உங்களுடைய 100வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
பிறந்தநாள் பரிசாக ஒரு தங்கப் பல் செட் வாங்கி, "கருக்-மொருக்" னு கடிச்சுச் சாப்பிடற ஸ்னாக்ஸ் எல்லாம் வயிராற, மனசார சாப்ட்டு சந்தோஷமா கொண்டாட விரும்புகிறேன்.

2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?
கண்ணைத் திறந்து கொண்டே தூங்கக் கற்க விரும்புகிறேன்.

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
..தோ...இப்பத்தான்! :) மொதக் கேள்விக்கு பதில் எழுதும்போது சிரித்தேன், இப்பவும் சிரிக்கிறேன்! :)

4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
கரண்ட் கம்பியப் புடிச்சு தொங்கி(!) பார்க்க ஆசை..
கனெக்ட் பண்ணிய ஒயரை எல்லாம் கையால் இழுத்துப்பார்க்க ஆசை!
இங்கே அது முடியாது என்பதால், திங்க் பண்ணி அப்பறமா சொல்லறேனே, ப்ளீஸ்! ;)

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
உங்க அப்பா-அம்மாவை இவ்வளவு நாள் பார்த்த பிறகும் இப்படி ஒரு துணிகரமான முடிவை எடுத்த உன் மன தகிரியத்தை;)ப் பாராட்டுகிறேன். பல்லாண்டு, பல்லாண்டு, பலகோடி நூறாண்டு வாழ்க! :)

6. உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
பூமிப் பந்தின் ஒரு பக்கம் பகல், ஒரு பக்கம் இரவு எல்லாம் இருக்கப்படாது. எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் இரவு, ஒரே நேரத்தில் பகல். அப்புறம், உலகத்தில 24 மணி நேரம், 35 மணி நேரம் விமானப் பயணங்களெல்லாம் கிடையாது. கண்ணை மூடி கண்ணைத் திறந்தா, யு.எஸ். டு கோயமுத்தூர்(சும்மா உதாரணமுங்க..எந்த ஊர் வேணா வைச்சுக்கலாம்! ) போயிரணும்.

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
நல்லவங்க, நண்பர்ங்க, பெரியவங்ககிட்ட கேக்கிறதுதான். ஆனா கடைசி முடிவு ஆண்டவன் கைல. கண்ணை மூடி சாமி கும்புட்டு எந்த வழியில் போகும்படி என் மனதிற்கு தோன்றுமாறு ஆண்டவன் என்ன சொல்றாங்களோ அதில போயிருவங்க.

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
இன்னா பண்றது! நம்மளும் பிரபலம் ஆகிட்டோம்னு கண்டுக்காம போயிக்கினே இருக்கறது தான்! ஐ டோண்ட் கேர்! ;) நான் எனக்கு உண்மையா இருப்பது மிக முக்கியம்னு நினைக்கிறேங்க.

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
நான் "சொல்ற" நிலைமையில் இருப்பனான்னு தெரில. அழுதுகிட்டு இல்ல இருப்பேன்? அவரையும் மனம் கரையும்வரை அழுது முடிக்கச் சொல்லி அதன் பின்னர் தேற்ற முயல்வேன்.

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
இந்தக் கேள்விய மெய்யாலுமே பாராட்டுறேன்ங்க.."உங்க வீட்டில்" என்று ஒரு வார்த்தையச் சேர்த்தீங்களே..அதுக்காக! :) நம்ம வீட்டில என்ன வேணா பண்ணலாமே! ம்...என்ன பண்ணலாம்?? வீட்டை க்ளீன் பண்ணுவோம் முதல்ல..அப்புறம் இருக்கவே இருக்கு டிவி-கம்ப்யூட்டர்-ஐ பேட் எக்ஸறா..பிறகு சமையல், சாப்பிடறது..எனக்கு தனியா இருந்தா தூக்கம் மட்டும் வராது, சோ நோ தூக்கம். தட்ஸ் ஆல்!
~~~
சரி, ஒரு வழியா மொக்கைய முடிச்சாச்சு..ஒடஞ்சு சுக்கு நூறாப் போன உங்க இதயத்தை சிரமப்பட்டு, பெவிகால், க்விக்-ஃபிக்ஸ், எம்-ஸீல் எல்லாம் போட்டு ஒட்டிகிட்டு சாப்பிடவாங்க!!
ஒரே தட்டை சுத்திச் சுத்தி வந்து படமெடுத்திருக்கேனேன்னு யோசிக்கப்படாது..நாமல்லாம் ஆரு? விக்கிரமாதித்தன் வம்சமில்லையா..நினைச்சது கிடைக்கும்வரை விடாம சுடுவோம்ல? ;) 
 இந்தப் படத்தில சோறு ஃபோகஸ் ஆகிருக்குங்க..
 இந்தப் படத்தில பச்சைப்பயறும், நெய்யும் ஃபோகஸ் ஆகிடுச்சு..
 இதிலே கேரட் பொரியல்...
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், குட்டி உருளை வருவல்!! இவரை போட்டோ எடுக்கத்தான் இம்புட்டு பில்ட்-அப்பூ! ரொம்ப ரொம்ப சிம்பிள் அண்ட் டேஸ்ட்டி வருவல். சின்ன உருளைக் கிழங்கை வேகவைச்சு தோலுரிச்சு, ஓரொரு கிழங்கையும்  உள்ளங்கைல வைச்சு லேசா அழுத்தி வைச்சுக்குங்க. கடாயில கொஞ்சம் எண்ணெயை தாராளமா ஊத்தி, கடுகு தாளிச்சு வெந்த கிழங்கு, மஞ்சப்பொடி போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிட்டு, உப்பு மிளகாத்தூள் போட்டு புரட்டி இறக்கிருங்க. தட்ஸ் ஆல்! மொறு மொறுன்னு காரசாரமான வறுவல் ரெடி!
ஓக்கே...நன்றி வணக்கம், அடுத்த பதிவில் சந்திப்போம். 

Wednesday, June 25, 2014

ரோஜா...ரோஜா!

ரோஜா..ரோஜா..ரோஜா..ரோஜா!
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்!
...
.....
..
இந்த வரிகள் இந்தப் பதிவிற்கு பொருந்தாது. ஏனெனில் இந்த ரோஜாக்கள் எல்லாமே என் வீட்டு ரோஜாக்கள். :)
முதல் படத்தில் இருப்பவை இன்று வீடு வந்த பூங்கொத்து ரோஜாக்கள்!
~~
கடந்த வருடம் அக்டோபரில் பூத்துக் குலுங்கிய ரோஜாச்செடியில் இந்த வருடத்தின் முதல்ப்பூ!
 . முதல் படத்தை விட இன்னும் சற்றே அருகில் போய் எடுத்தது அடுத்த படம்..
ஆரஞ்சு நிறத்தில் மலர ஆரம்பிக்கும் இந்தப்பூ வாட வாட ரோஸ் நிறமாகிவிடும்..
 ~~
சில பல வருடங்களாக எங்களுடன் இருக்கும் சிவப்பு ரோஜாக்கள்..
சிறு பூக்கள் என்றாலும் கொத்துக் கொத்தாகப் பார்க்கையில் அதுவும் ஒரு அழகுதான்!
பொறுமையாக கொலாஜ் பண்ணிட்டேன், நீங்க பார்த்துதான் ஆகணும், வேறு வழியில்லை! ஹிஹி..
~~
  இந்த ஃபிப்ரவரியில் வாங்கிய ரோஜா..மொட்டு மலர ஆரம்பித்ததில் இருந்து க்ளிக்கியது..
~~
இந்த ஒற்றை ரோஜா..
அழ.....கா இருந்ததால் சுற்றி சுற்றிப் படமெடுக்கவைத்துவிட்டது!
~~
எனக்காய் மெனக்கெட்டு வாழ்த்தட்டை செய்த ஒரு அன்பு அக்காவிற்கு என்னால் சொல்ல முடிந்த சிறு நன்றி! தேங்க் யூ அக்கா! 
:) 
~~

Saturday, June 14, 2014

முள்ளங்கி-குடைமிளகாய் பொரியல் / Radish-Capsicum Stir-fry

முள்ளங்கியைப் பொரியல் செய்வதா??  அதும் குடைமிளகாய் கூடவா??-என பலர் எண்ணக்கூடும், ஆனால் "மாத்தி யோசி"ச்சு இப்படி ஒரு புதிய காம்பினேஷனில் இறங்கினேன். ஏற்கனவே சிவப்பு முள்ளங்கி பொரியல் பலமுறை செய்திருப்பதால் கொஞ்சம் தைரியமாகவே வெள்ளை முள்ளங்கியில் செய்யத் தொடங்கினேன். உணவு வகைகள் வண்ணமயமாக:) இருக்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாறு கடந்த வருஷத்தில் இருந்து பிடித்துக்கொண்டதில் கண்ணில் படும் பளிச் காய்களை எல்லாம் ஒன்றாக்கி ரணகளப்படுத்திட்டிருக்கேன், அது வேற கதை! ;)  நீங்களும் மானாவாரியான காய்கறிகளை விதவிதமான காம்பினேஷன்ல சமைச்சுச் சாப்பிடுங்க, புதுருசிகளை சுவைக்க வாய்ப்பும், அதனால ஒரு சந்தோஷமும் கிடைக்கும். :)
தேவையான பொருட்கள்
முள்ளங்கி-11/2( ஒரு கப் அளவு நறுக்கிய முள்ளங்கி)
குடைமிளகாய்-1(விரும்பிய வண்ணத்தில்)
நறுக்கிய வெங்காயம்-2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-2(காரத்துக்கேற்ப)
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் 

செய்முறை
முள்ளங்கியை கழுவி, தோல்சீவி விரும்பிய வடிவில் நறுக்கவும்.
குடைமிளகாயையும் கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். 
வெங்காயம்-பச்சைமிளகாய் நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
அதனுடன் வெங்காயம்-பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்களையும் சேர்க்கவும்.
கிளறிவிட்டு, கால்கப் தண்ணீரும் தேவையான உப்பும் சேர்த்து வேகவிடவும்.
காய்கள் மெல்லியதாக நறுக்கியிருப்பதால் விரைவில் வெந்துவிடும். குழைய வேகவிடாமல் காய் வெந்ததும் தேங்காய்த்துருவல்  சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான கலர்ஃபுல் பொரியல் ரெடி. எல்லா வகையான சாதங்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

Sunday, June 8, 2014

கம், கம், கேப்ஸிகம்! :)

கடந்த வருடம் வாங்கிய குடைமிளகாய்ச் செடி, இந்த முறை பல பூக்கள் பிடித்து பரபரப்பாக:) வளரத்துவங்கியது. பூக்கள் பலவும் பிஞ்சாகி வளரவும் ஆரம்பித்தன. 
பிஞ்சுகள் விட்டு சந்தோஷமாக வளர்ந்த செடி, வசந்தத்திலேயே ஒரு முறை வந்த கோடை வெயில் தாக்குதலில் மாட்டியது. மிளகாய்ப் பிஞ்சுகள்/காய்கள் விரைவில் முகம் சிவந்து நிறம் மாற ஆரம்பித்துவிட்டன.
கூடவே ஏதோ பூச்சிகள் வேறு தொந்தரவு செய்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவ்வப்போது தண்ணீர் ஊற்றுவதை தவிர வேறு ஏதும் செய்யவில்லை இந்த அப்பாவிச் செடிக்கு. அதுவாக வளர்ந்தது பாவம்..
பழுத்த மிளகாய்ப் பழங்களைப் பறித்தாயிற்று.  விதவிதமான வடிவங்கள் இருந்தாலும் அவையும் ஒரு அழகாகத் தெரிகின்றன எனக்கு.  தண்ணீர் ஊற்றியதைத் தவிர ஏதும் செய்யாத எனக்கு செடி தந்த அன்பளிப்புகள் என்பதாலோ? :)
மிளகாய்களை குழம்பாக்கி பிரியாணிக்கு சைட்-டிஷ் ஆக ஒரு நாளும்...
2 சிறிய மிளகாய்களை முழுதாக சாம்பாரில் போட்டும் (படமெடுக்க மறந்தேன்!! ;)), 
முள்ளங்கியுடன் கலந்து பொரியல் செய்தும்..
ரசித்து ருசித்தோம். ருசி அபாரமாக இருந்தது. மிளகாய் குழம்பு ரெசிப்பி இங்கே, பொரியல் ரெசிப்பி விரைவில் வெள்ளித் திரையில் :)  வெளியாகும்! நன்றி, வணக்கம்!

Sunday, June 1, 2014

ஸ்ருதியும், லயமும்! :)


எங்கள் வாழ்வில் 
லயமும்..
ஸ்ருதியும்..
இணைந்து...
இயைந்து...
இன்ட்ரஸ்டிங்-ஆகப் போய்க்கொண்டிருக்கிறது. என்னடா, கவித மாதிரி எழுத ஆரம்பிச்சு டகால்னு பேச்சுவழக்குக்கு வந்தாச்சேன்னு பாக்கறீங்களா? ஹி...ஹிஹ்...ஹி..கவிதையெல்லாம் எழுத நேரமில்லீங்கோ!

ஸ்ருதியும் லயமும் அப்பப்ப ரெம்ப;) அன்பூ பாராட்டிக்கிறாங்க, அதனால சாக்கிரதையாப் பாத்துக்கவேண்டியிருக்கு ரெண்டு பேரையும். ஏனா ரெண்டுமே பேபீஸ் பாருங்க, எப்ப என்ன பண்ணிப்பாங்கன்னு தெரியாதே..அவ்வ்வ்!
கடந்த பதிவுகளில் எங்களை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றிகள்! ஸ்ருதி-லயத்துடன் நால்வரும் நலமாக இருக்கின்றோம். :)
மீல் மேக்கர் புளிக்குழம்பு/சோயா புளிக்குழம்புடன் சுடு சோறு..ஒரு வாய் சாப்ட்டுட்டுப் போங்க, நன்றி! குழம்பு ரெசிப்பி படங்களுடன் இங்கே

LinkWithin

Related Posts with Thumbnails