Tuesday, November 29, 2011

தேங்க்ஸ்கிவிங் டே,கருப்பு வெள்ளி & சைபர் திங்கள்!

கடந்த வாரம் தேங்க்ஸ்கிவிங் டே, ப்ளாக் ஃப்ரைடே, சனி-ஞாயிறு என்று லாங் வீகெண்டாக கழிந்தது. நாலு நாட்களும் நாலு நிமிஷங்களாகக் கழிந்ததும் அவ்வ்வ்....மறுபடி மண்டே வந்துருச்சு! நம்ம ஊர் பொங்கல் தீபாவளி போல இங்கே இந்த நாட்களை கொண்டாடறாங்க. புதன்கிழமை வரை தேங்க்ஸ்கிவிங் டின்னருக்கு மளிகை வாங்க கடைகள்ல கூட்டம்!

முழுசு முழுசா டர்க்கிய வாங்கி அதை அப்படியே டீப் ப்ரை பண்ணறாங்க, அல்லது ஸ்டஃப் பண்ணி bake பண்ணறாங்க. ரோஸ்டட் டர்க்கி, mashed பொட்டைட்டோ & க்ரேவி, க்ரான்பெரி ஸாஸ், பம்கின் பை, க்ரீன் பீன்ஸ் கேஸரோல் இதெல்லாம் ரெகுலரா தேங்க்ஸ்கிவிங் டே டின்னர்ல இருக்கும் போல. எங்கெங்கேயோ சிதறி கிடக்கும் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் ஒரு வீட்டில் கூடி சமைத்து, டைனிங் டேபிளில் அலங்கரித்து வைத்து, சந்தோஷமா சாப்பிட்டு வீகெண்டை கழிக்கிறாங்க. டேபிள் அலங்காரம் என்ற பேர்ல இதுபோன்ற வினோதங்களும் நடக்குது!:):)))))

தேங்க்ஸ்கிவிங் டே எப்படி வந்ததுன்னு கொஞ்சம் தேடிப்பார்த்த பொழுது கிடைத்த தகவல்களை உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு இந்தப்பதிவு. நவம்பரில் வரும் நான்காவது வியாழக்கிழமை அன்று கடவுளுக்கு/இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக, அறுவடையான பொருட்களை எல்லாம் வைத்து சமைத்து சாப்பிடறாங்க. இங்கிலாந்தில் ஹார்வெஸ்ட் ஸீஸன்ல முழு வாத்தை பொரித்து சாப்பிடும் வழக்கம் இருந்திருக்கு. அங்கே இருந்து பில்கிரிம்ஸ் வட அமெரிக்கா வந்தப்ப இங்கே வாத்து கிடைக்கல, வான்கோழி நிறையத் திரிஞ்சுட்டு இருந்திருக்கு, அப்புடியே அமுக்கிட்டாங்க! :);) இது தான் உண்மையான காரணமான்னு எனக்கு தெரீலைங்க..ஆனா இதுவும் ஒரு காரணம்! :)))
~~
வியாழக்கிழமை நல்லா சமைச்சு சாப்பிட்டு முடிச்சு ப்ளாக் ப்ரைடே அன்று அஃபிஷியலா இந்த வருஷம் கிறிஸ்மஸுக்கு ஷாப்பிங்கை தொடங்குது..எல்லாக் கடைகளும் அன்னிக்கு தள்ளுபடி டீலாப் போட்டுத் தாக்கறாங்க! குறிப்பா சொல்லணும்னா எலக்ட்ரானிக் சாதனங்கள்,வீடியோ கேம்ஸ் இவைதான் விற்பனையில் முதலிடம் பிடிக்குது.

இந்த கருப்பு வெள்ளிக்கு வரலாறுன்னு பார்த்தம்னா பலவருஷங்களுக்கு முன்பு தங்கம் விலை பாதாளத்துக்கு விழுந்து, பங்கு சந்தைகளும் படுத்து எல்லா வியாபாரமும் நஷ்டத்தில் ஓடிட்டு இருந்ததாம். அப்ப நஷ்டக்கணக்கை சிவப்பு இங்கில் எழுதிட்டு இருந்திருக்காங்க. நிலைமை சீராகி, ஒரு வெள்ளிக்கிழமையில் லாபம் வர ஆரம்பித்ததும் லாபக்கணக்கை கருப்பு இங்கில் எழுத ஆரம்பித்தாங்களாம். அதனால் அந்த வெள்ளிக்கிழமைய "Black Friday"ன்னு சொல்லி, வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த ஒரு நாள் எல்லாப் பொருட்களும் விலை குறைத்து தருவதாக சொல்கிறார்கள்.

ஒரு மாதம் முன்பிருந்தே எந்தெந்த கடையில் என்னென்ன பொருள் சிறப்பு விற்பனைக்கு வருதுன்னு ஆன்லைன்ல கணக்கெடுக்கும் மக்கள் வியாழன் நள்ளிரவிலேயே நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடைகளுக்கு முன்னால போய் வரிசையில நின்னுக்கிறாங்க. கடைகளும் நடுராத்திரி, அதிகாலை 4மணின்னு திறந்துடறாங்க. எந்த கடைகண்ணிக்கு போனாலும் ஒழுங்கா கியூவில் நின்று டீசன்ட்டாக ஷாப்பிங் செய்யும் இந்த ஊர்க்காரங்க ப்ளாக் ஃப்ரைடே அன்று தலைகீழா மாறிவிடுவது ஆச்சரியம்! அடிச்சுப்பிடிச்சு உள்ளே போய் தள்ளுவண்டிகளுக்கும் மனிதக்கூட்டத்துக்கும் இடையே நீந்தி பொருட்களை எடுப்பது ஒரு சாகசம் போல இருக்கும்!
இந்த வருஷம் கலிஃபோர்னியா வால்மார்ட்டில் ஒரு பெண்மணி, தான் வாங்க வந்த பொருளை மத்தவங்க நெருங்க விடாமல் பெப்பர் ஸ்ப்ரே-யால் தாக்குதல் நடத்தியிருக்குது! இந்த மொளகாப்பொடி தாக்குதலில் இருபது பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க! எ.கொ.ச.இ.?


இது மட்டும் இல்லை, இன்னொரு வால்மார்ட்டில் யாரோ ஒருவர் துப்பாக்கியில் சுட்டதிலும் பலபேர் காயம் அடைந்திருக்காங்க. அத்தனை கூட்டத்தில் யாரு சுட்டாங்க, எதுக்கு சுட்டாங்கன்னு கண்டுபுடிக்கவா முடியும்? தாக்குதல் நடத்தின ஆளுங்க எஸ்கேப்பாம்..போலீஸ் தேடிட்டு இருக்காங்க. என்ன சொல்றது போங்க!

Shooting at Walmart on Black Friday

இந்த வருஷம் ப்ளாக் ஃப்ரைடேவில் ஏறத்தாழ 226பில்லியன் வாடிக்கையாளர்கள் கடைகளுக்குப் போய் 52 பில்லியன் டாலர் பணத்தை செலவழித்து பொருட்கள் வாங்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்லுதாம்!!!
~~
இந்த தள்ளு-முள்ளு ஷாப்பிங் ஆர்ப்பாட்டம் பிடிக்காத ஆட்களும் பலபேர் இருப்பதால், அவர்களை அட்ராக்ட் பண்ணுவதற்காக ப்ளாக் ப்ரைடேவிற்கு அடுத்து வரும் திங்கட்கிழமையை "Cyber Monday" என்று ஆன்லைனில் விற்பனை நடக்கிறது. வெள்ளிக்கிழமை விற்பனையை விடவும் 10% குறைவு, ப்ரீ ஷிப்பிங் என்று பல்வேறு கொக்கிகள் போட்டு வாடிக்கையாளர்களை திமிங்கிலமாகப் பிடிக்க திட்டம் போட்டிருக்காங்க. :) அதுவும் நல்லாவே வொர்க் அவுட் ஆகும் போலதான் தெரியுது. சைபர் மண்டேவைப் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் இங்கே க்ளிக்கிப் பாருங்க.
~~
அதெல்லாஞ்சரி..நீங்க என்ன பண்ணீங்கன்னு கேட்டீங்கன்னா...நாங்க இந்த வருஷம் கடைப்பக்கமே போகல.(ஒரு வேளை அதனாலதான் இந்த வன்முறையெல்லாம் நடந்திருக்குமோ?ஹிஹி)..வியாழக்கிழமை நாள் பக்கத்தில இருக்கும் நேஷனல் பார்க் போனோம்..வெள்ளிக்கிழமை நிதானமா பொழுதிறங்க பக்கத்தில இருந்த கடைக்குப் போய் வின்டர் கோட் வாங்கினோம்...சனிக்கிழமை பீச் போய் சன்ஸெட் பார்த்துகிட்டே சாவகாசமா சாப்பிட்டோம்.ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருந்த மற்ற வேலைகள் பார்க்க சரியா இருந்தது. திங்கட்கிழமை டிவியில் வந்த ப்ளாக்ஃப்ரைடே மேனியா செய்திகளைப் பார்த்ததின் தாக்கமே இந்தப் பதிவு!:)

Tuesday, November 22, 2011

அது..இது..எது??!!

வழக்கம் போல எதோ ஒரு குசும்பு டைட்டில்னு உங்களுக்கே புரிஞ்சுதான் வந்திருப்பீங்க! என்ன செய்ய...ப்ளாக் ஆரம்பிச்சு கொஞ்சநாள்ல இருந்து சமைக்கிறதோட இல்லாம, அதையும் இதையும் உளறிக்கொட்டி கிளறி மூடி, அப்புடி-இப்புடின்னு நானும் 200 பதிவு தேத்தீட்டேன்! :))))

பொதுவாவே இந்த நம்பரை எல்லாம் கவனிக்கிற பழக்கம் இல்லைன்னாலும் அங்கங்க வரும் அரைசதம் பதிவு, முதல் சதப்பதிவு, 75வது பதிவு அதுக்காக ஒரு Give away, இதெல்லாம் பார்க்கிறப்ப எனக்குள்ள உறங்கிகிட்டு இருந்த சிங்கம் சிலிர்த்து எழுந்து பார்த்தப்பவே 200வது பதிவு பப்ளிஷ் ஆகிருந்தது. ஹிஹி!

சரி, இருநூறு போனாப்போகட்டும், 201வது பதிவாவது இனிப்பாப் போடுவோம்னுதான் ஒருமுறை நண்பர் வீட்ல சாப்பிட்ட இனிப்பை ட்ரை பண்ணுவோம்னு ஆரம்பிச்சு, எப்புடியெப்படியோ என்னென்னமோ நடந்து ஒருவழியாக மேலே இருக்க ஸ்வீட்டாக அவதாரம் எடுத்துச்சு. இதை செய்து முடிச்சு பக்கத்துவீட்டுக்கு டப்பால அனுப்பிட்டு சில நண்பர்களுக்கு மெய்ல்ல அனுப்பினேன்.

ஒரு இடத்தில இருந்து "தேங்கா பர்ஃபி சூப்பர்ர்ர்ர்ர்ர்!"னு பதில் வந்தது!?!! இன்னொரு இடத்தில இருந்து "ப்ரெட் pudding-ஐ டயமண்ட் ஷேப்ல கட் பண்ணிட்டீங்களா?"ன்னு கேள்வி வந்தது!?!! சிலரிடம் இருந்து பேச்சுமூச்சே இல்ல!?!! ஹூம்..என்னவோ போங்க,நான் ஒண்ணு நினைச்சு செய்யப்போக, அது என்னவோ நினைச்சுகிட்டு புதுசா வந்தது. விநாயகர் புடிக்கப்போய் முருகரா வந்தமாதிரின்னு வச்சுக்குங்களேன்! கொரங்கா வராதா வரை சந்தோஷம்தான நம்மளுக்கு?? என்ன நாஞ்சொல்றது? ;))))

ஜோக்ஸ் அபார்ட், என் பதிவுகளைப் படித்து ஊக்கம் தரும் உள்ளங்களுக்கும், பின்தொடரும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! இனிப்பு சாப்புடுங்க! :)))

~~~~

பூரியவும் ஒரு ரெசிப்பின்னு தனியாப் போடணுமா ன்னு மனசாட்சி கேட்டுதா..அதனால போடோவுடன் நான் நின்னுட்டேன். பூரிக்கு ரவை போடணும், எண்ணெய் ஊத்தி பிசையணும் எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாம் நான் செய்யறதில்லைங்க. கொஞ்சமா உப்புப் போட்டு, மாவை கொஞ்சம் கெட்டியாப் பிசைஞ்சு குட்டி குட்டி பூரியா செய்துருவேன், பார்க்கவும் அழகா இருக்கும், எண்ணெயும் கம்மியா ஊத்திப் பொரிச்சாப் போதும். பூரி-தேங்காச்சட்னி-உருளை கிழங்கு மசால்..இதான் எங்க டீஃபால்ட் காம்பினே ஷன்! :)
~~~~
இது போனவாரம் செய்த ரவா இல்டி..ச்சீ,ச்சீ, இட்லி! :))) எப்பவுமே எங்கூட்டுக்காரருக்கு ரவா இட்லி-ரவா தோசை இதெல்லாம் புடிக்காது. இருந்தாலும் இந்த முறை ஈனோ சால்ட் வாங்கிவந்து செஞ்சு பார்ப்பமேன்னு..
சாயந்தரம் வந்ததுல இருந்து ஆஃபீஸ் call-லயே உட்கார்ந்திருந்தாரா, தேங்காச் சட்னி அரைக்க மிக்ஸி போடமுடில. அவர் வருகைக்கு முன்பே அரைச்ச வெங்காயச்சட்னி, ஃப்ரிட்ஜ்ல இருந்த பீட்ரூட் சட்னியுடன் இட்லி சூப்பரா இருந்தது. ரெசிப்பி விரைவில் வெள்ளித்திரையில்! ;)
~~~~
லிஸ்ட்ல அடுத்து வருவது மல்லிகே(Mallige) இட்லி/மல்லிகைப்பூ இட்லி/குஷ்பூ இட்லி!! ;) சுடச்சுட இட்லிய எடுத்து அதுமேல இதயம் நல்லெண்ணெய் ஊத்தி சாப்ட்டா.....:P:P:P ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூப்பரா இருக்கும்! சாப்பிட்டிருக்கீங்க? ஜோதிகாதான் அதெல்லாம் சாப்புடும், நம்ம எங்கே??!ன்னு அங்கலாய்க்கறீங்களா..வெயிட்டீஸ்!! நான் எங்க வீட்டுல பூத்த மல்லிகைப்பூவ(!) பத்தி சீக்கிரமா சொல்லறேன்.
~~~~
இந்த கேப்ல பல படங்கள் &ரெசிப்பிகள் ரெடியாகிடுச்சு! சாய்ஸ் நிறைய வந்ததால எதைப் பப்ளிஷ் பண்ண, எந்த வரிசையில பப்ளிஷ் பண்ணன்னு ரெம்ப குழப்பமாகிருச்சுங்க. அது..இது...எது??!! ன்னு மண்டையப் பிச்சுகிட்டதுல 2 நாள் ஓடிருச்சு. முக்காவாசிப் படங்கள கொலாஜ் பண்ணினேன்.

மண்டே ப்ளூஸ் கூட அது..இது..எதுங்கற குழப்பமும் சேந்ததால கம்ப்யூட்டர் ஸ்க்ரீன விட்டுத் தொலைச்சிட்டு கடவுள் படைச்ச பூமிப்பந்தை ரசிக்க கையில் கேமராவுடன் புறப்பட்டேன் நேற்றுப் பிற்பகலில்! சரி..சரி..ஓடாதீங்க..இயற்கையில மூழ்கினதுல கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். :)

எங்க வீட்டுப்பக்கதிலே இருக்க ஒரு பார்க்கில் நான் ரசித்த இலையுதிர்கால வண்ணக்கலவை இந்தப் படம்! மாலை வெயில் மரங்களை கழுவிவிட்டதில் இன்னும் கொஞ்சம் மெருகேறி பலநிறங்களில் படம் காட்டிய மரங்கள், இலைகள், பச்சைப்பட்டு விரித்தது போல புல்வெளி.. பார்க்க பார்க்க அலுக்கவில்லை! சாலைகளில் கடந்து செல்கையில் கலர்ஃபுல் மரங்கள் "வாவ்!"னு திரும்பிப் பார்க்க வைக்கிறது.
~~~~
மழையும் மழை நிமித்தமும்..

ஞாயிற்றுக் கிழமை வெளியே கிளம்பும்போதே வானில் கருமேகங்கள் படைதிரண்டு தாக்குதலுக்குத் தயாராய் நின்றிருந்தன..கடைக்குள் இருந்து வெளியே வருகையில் சற்றே ஓய்ந்திருந்த மழையில் சுத்தமாய்க் கழுவி விட்டதுபோல பளபளத்த பார்க்கிங் லாட்டில் அழகாய்ப் பிரதிபலித்த மரம்..காருக்குள் இருந்து க்ளிக்கியதில் கவிதையாய்ப் படிந்த மழைத்துளிகள்!! ம்ம்ம்...குளிர்காலம் தொடங்கிடுச்சு!!! :)))))))
மழையோடு ஒரு இலையுதிர் காலம்..
மழையையும் மரங்களில் இயற்கையின் வண்ணக்கோலங்களையும் ரசிக்க சில நொடிகள்/நிமிஷங்கள் இருந்தால் ஆல்பத்தை க்ளிக்கிப் பாருங்க!:)
~~~~
அது..இது..எது??!...எந்த வரிசையில் பதிவுகளை எதிர்பார்க்கறீங்கன்னு சொன்னா வசதியா இருக்கும். அதுக்காக அதே வரிசையில் போடுவேன்னு உத்தரவாதம் தரமாட்டேன், ஆனா I will try to follow that order!!
[இதுக்கப்பறம் கண்டிப்பா கல்லடிதான் விழும்..மீ எஸ்கேப்பூ! ;))))]
~~~~

பி.கு. அது என்ன ஸ்வீட்னு கடைசிவரைக்கும் சொல்லவே இல்லையேன்னு கேட்கும் க்யூரியாஸிட்டி வாசகர்களுக்கு என்ன பதில் சொல்றது?? நான் எதை நினைச்சு ஆரம்பிச்சேனோ அந்த ப்ராடக்ட் கிடைச்ச பிறகுதான் இன்கிரிடியன்ட்டை சொல்லுவனுங்க. நாங்கள்லாம் கஜினி முகமது பரம்பரையில்ல..ஹிஹிஹி! நீங்க தைரியமாச் சாப்புடுங்க! ;)


Tuesday, November 15, 2011

ரஸ்க்

தேவையான பொருள்: ஸ்வீட் பன்

செய்முறை
அவன்-ஐ 275F ப்ரீஹீட் செய்யவும்.

பன்களை நீளமான துண்டுகளாக நறுக்கவும்.

நறுக்கிய பன்துண்டுகளை பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.

பேக்கிங் ட்ரேயை அவன்-ல் வைத்து 60-70 நிமிஷங்கள் பேக் செய்யவும்.

மொறுமொறுன்னு வாயில் போட்டதும் கரையும் டேஸ்ட்டி ரஸ்க் ரெடி!

சூடான டீ & ரஸ்க்!
என்ஜாய்!
:)))
~~***~~ ~~***~~ ~~***~~
இப்ப உங்களுக்கு ஒரு சந்தேகம் வரணும், இவ்ளோ சூப்பரா இருக்கற பன்னை அப்புடியே சாப்பிடாம எதுக்கு ரஸ்க் பண்ணனும்?-அப்படின்னு!! :)

போனவாரம் இந்த பன்களை கடையில் இருந்து என்னவர் வாங்கிட்டு வந்தார், பொதுவா இது வாங்கினா டீ-காபி கூட அப்புடியே சாப்பிடறதுதான் வழக்கம். சும்மா சாப்பிடவே சூப்பரா இருக்கும். இந்த வாட்டியும் அழகா இருந்தது. ஆர்வமா பேக்கட்டை பிரிச்சு ஒரு பன்னை எடுத்தா...

பன் மேலே நல்லா இருக்கு, உள்ள சரியா bake ஆகவே இல்ல!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ரெண்டு ஆப்ஷன் இருக்கு, ஒண்ணு திருப்பியும் கடையில கொண்டுபோய் ரிடர்ன் பண்ணலாம், அல்லது அதையே சரி பண்ணி edible-ஆ மாத்தலாம். இதிலே முதல் ஆப்ஷன் ப்ராக்டிகலி கொஞ்சம் கஷ்டம்!

பொதுவாவே எந்தப்பொருளையும் ரிடர்ன் பண்ணுவது என்னவருக்கு ஆகாத விஷயம், அதிலும் இந்தமாதிரி perishable ஐட்டங்களை எல்லாம் திருப்பி கொண்டுபோய் ரிடர்ன் பண்ணுவது அவ்வளவா நல்லாவும் இருக்காது, அதனால் இப்படி ஸ்லோ bake செய்து ரஸ்க்கா மாத்தியாச்சு. :)

பன்னும் வேஸ்ட் ஆகலை, நம்ம ஹெல்த்தும் ஸ்பாயில் ஆகல! கரெக்ட்டுதானே..நீங்க என்ன சொல்றீங்க?!

பி.கு. கடை..கடைன்னு பொதுவா சொன்னா எப்புடி? அது எந்த கடைன்னு கேக்கறீங்களா...US மக்கள் கண்டுபிடிச்சுருவாங்கன்னு நினைக்கிறேன். guess பண்ணுங்க, இல்லன்னா நாளைக்கு சொல்றேன்!

Friday, November 11, 2011

டாய் ஸ்டோரி-3

சமையல் குறிப்பா போட்டுப் போட்டு மகி அக்காவுக்கு ரெம்ப போர் அடிக்குதாம்..என்ன எழுதறதுன்னு ஹெட்-ஐ ப்ரேக் பண்ணிட்டு இருந்தாங்க,அதனால நாங்கள்லாம் ஒதவிக்கு வந்தம்.




எப்பவாவது ஒருக்கா வரோம்,நம்ம எல்லாம் படிக்கறவங்க நினைவுல வைச்சிருப்பாங்களான்னு சீரியஸா டிஷ்கஷேன் பண்ணம், அக்கா சொன்னாங்க, "தீபாவளி பொங்கல் எல்லாம் டெய்லியுமா வருது? வருஷத்துக்கொருக்காத்தான வருது? அதுக்காக எல்லாரும் அதையெல்லாம் மறந்திடராங்களா? கண்டிப்பா கிடையாது! ஸ்பெஷலா ஞாபகம் வச்சு கொண்டாடுவாங்க! அது மாதிரிதான் நீங்களும்! தைரியமா எழுதுங்கோ!"ன்னு!! நாங்க ஸ்பெஷல்தானே?? வாட் யு ஸே?:))))))))))

பேசினது போதும்,சரி வாங்க,மேட்டருக்குப் போவோம்! ஸ்டார்ட் மீசிக்! ஆஅஅ..டண்டணக்கா..டமுக்கு டக்கா...ஆ...டண்டணக்கா!

க்ரிஸ்லி: பசங்களா ரெம்ப குதிக்காதீங்க,பக்கத்து வீட்டுக்காரங்க நாய்ஸ் பொல்யூஷன்னு கம்ப்ளெய்ன்ட் பண்ணிருவாங்க..அடக்கி வாசிங்க!

#########^^^^^^^########

*இன்னிக்கு தேதிக்கு ஏத்தமாதிரி பதினொரு விஷயம் சொல்லணும்னு அக்கா விரும்பினாங்க. (இதுல ஒரு விஷயம் முடிஞ்சிருச்சு, நாங்க கணக்குல கரீக்ட்டா இருப்பம்ல?;))

* '11ஆம் வருஷம், பதினொண்ணாம் மாதம், பதினொண்ணாம் தேதி,பதினொரு மணி,பதினொரு நிமிஷத்துக்கு இந்த போஸ்ட் வரமாதிரி அக்கா ஷெட்யூல் பண்ணிருக்காங்க.

*போன ஞாயிறு முதல் இந்த டேலைட் சேவிங் வந்து fall back ஆனதால் ஜாலியா இன்னும் ஒரு மணி நேரம் தூங்க முடியுதாம்..springல ஒன் அவர் forward பண்ணா கடியா இருக்குமாம்.

Ted: எங்களுக்கென்ன..எல்லா நாளும் ஒரே மாதிரிதான். மனுஷங்களுக்குதானே இந்த ப்ராப்ளம்லாம்! ஹிஹி!

*நேத்து தயிர்சாதத்துக்கு அ.கோ.மு. [அவித்த கோழி முட்டை] காம்பினேஷன் நல்லா இருக்குமான்னு ஒரு டிஸ்கஷன் (இங்கே) நடந்தது. அது நல்லா இருக்காதுக்கு சில பேர் வேற காம்பினேஷன்லாம் சொன்னாங்க. அதனால இன்னிக்கு தயிர்சாதம்-மோர்மிளகா-வெங்காயவடகம்- இஞ்சி ஊறுகாய்-புதினா சட்னி. யாருக்கு எது புடிக்குமோ சைட் டிஷா வைச்சு சாப்பிடுவீங்களாம்.


Ted: இதெல்லாம் என்னா..சும்மா சப்ப மேட்டரு! எழுத எதுவும் கிடைக்கலனா போட்டோவ போட்டுர்ராங்கப்பா!! இப்பவே என்ன சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறாங்க..எங்க போயி 11 விஷயம் சொல்றது...ஹாஹாஹா!

*அக்கா ப்ளான்லாம் பண்ணி ஷெட்யூல் பண்ணி வச்சாலும், இந்த போஸ்ட் பதினொண்ணு பதினொண்ணுக்கு பதிலா ஒன் அவர் முன்னாடியே..அதாவது10.11க்கே பப்ளிஷ் ஆகி அக்காவுக்கு பன்னு கிடைச்சிருச்சாம்! (Ted: ஹ்..ஹா..ஹா,மீ வெரி ஹேஏஏஏஏஏப்பி! ) ஏனா கம்ப்யூட்டர்ல டைம் இன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னும் சால்ட் லேட் சிட்டி டைம் ஜோன்லயே இருக்காம். அங்க mountain time zone, இங்க pacific time zone!! இன்னும் டீடெய்லா தெரிஞ்சுக்க விரும்பினா இங்ஙன போய்ப் பாருங்க.

* இந்த நீமோ மீன் மாதிரி இருக்கான்னு நினைச்சிக்காதீங்க. அவன் ஒரு white whale. அக்கா வாங்கின முதல் முதல் souvenir அவன்! சொல்லப்போனா எங்க எல்லாருக்கும் சூப்பர் சீனியர். அவன் பின்னால ஒரு கதையே இருக்குதாம். (be ready..story time starts!! )

##########vvvvvvvvvv##########

அமெரிக்கா வந்த புதுசுல அக்காவுங்க ப்ரெண்ட் பேமிலியோட(ப்ரசாத்-அனு & கிட்ஸ்) Connecticut-ல இருக்க சப் மெரைன் ம்யூஸியம் பார்க்கப் போனாங்களாம். ம்யூஸியத்தில நீர்மூழ்கி கப்பல் உள்ளே எல்லாம் போய்ப் பார்க்கலாம்னு ஆவலா போயிருக்காங்கா, ஆனா இவங்க போன சமயம் வின்டரா இருந்ததால சப் மெரைன்ஸ் எல்லாம் க்ளோஸ்ட்! ஏமாற்றத்தோட வெளியே வந்தப்ப கொஞ்சம் தூரத்தில ஒரு சப்மெரைன் போறத பாத்தாங்களாம், அதனால அங்க இருந்த அடுத்த கட் ரோடு, அதுக்கடுத்த ரோடு இப்படி கடகடன்னு போய் நின்னு நின்னு சப்மெரைன்ஸ்-ஐ போட்டோ புடிச்சிருக்காரு ப்ரசாத் அண்ணா. அப்பறம் மெதுவா மிஸ்டிக் அக்வேரியம் போயி வெள்ளை திமிங்கிலம் ஷோ,பெங்குயின்ஸ் எல்லாம் பார்த்துட்டு நீமோவ வாங்கிட்டு வீட்டுக்குப் போயிட்டாங்களாம்.

ஒரு வாரம் பத்து நாள் கழிச்சு, ப்ரசாத்-அனு வீட்டுக்கு ஒரு போன் கால்!! கார் நம்பர் சொல்லி, இந்த கார் உங்களுதான்னு கேட்டிருக்காங்க. அனுவும் ஆமான்னு சொல்ல, ஆரம்பிச்சது தலைவலி! போன் பண்ணீனது F.B.I.!!! லாஸ்ட் வீகென்ட் இந்த கார் சந்தேகம் தரும் அளவுக்கு(!) சப்மெரைனை தேடித்தேடி போட்டோ எடுத்திருக்குது. நீங்க யாரு..என்னன்னு கேள்வி மேல கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். அனு என்னென்னமோ சொல்லிப் பார்த்தும் கேக்காம, வீட்டுக்கே வந்து கார் ரெக்கார்ட்ஸ்,அவங்களோட பாஸ்போர்ட்-விஸா பேப்பர்ஸ், ப்ரசாத் எங்கே வேலை பார்க்கிறார்ங்கற விவரங்கள் எல்லாம் செக் பண்ணப்புரம்தான் நாங்கள்ளாம் sight seeing போயிருக்கோம்ங்கற நம்பிக்கையே FBIக்கு வந்திருக்கு!! :))))

மக்கா,இனிமேட்டு உங்களை சப் மெரைன் பக்கம் பாத்தீங்க,அம்புட்டுதான்ன்னு எச்சரிக்கை பண்ணிட்டுப் போனாங்களாம்!! (Ted: என்னா மாறி ஒரு காமெடி பாருங்க. சிரிச்சி சிரிச்சி எனக்கே வயிரு வலிக்கிது...ஆரும் ஊர் சுத்திப் பார்க்கப்போனீங்க, ஒயுங்கா ஊர சுத்திப்பார்த்துட்டு வந்து சேருங்க,ஓக்கை?)

இப்புடிப்பட்ட ப்ளாஷ் பேக் கொண்ட நீமோ, டேபிள்மேலே இருந்து தரையில விழுந்ததுல உடைஞ்சு போயிட்டானாம். அக்கா 2-3 வருஷமா பத்திரமா வச்சிருந்து இப்ப க்விக் ஃபிக்ஸ் போட்டு அவன் வாலை ஃபிக்ஸ் பண்ணிவைச்சிருக்காங்க.
***
*க்ராண்ட்பான்னு பேர் வைச்சதால இந்த மகிப்புள்ள என்னைய மறந்துருச்சு! கர்ர்ர்ர்ர்ர்! நான் அதுக்கெல்லாம் கோவிச்சுக்க மாட்டேன், ஞாபகப்படுத்திவிட்டு வந்துட்டேன்,பாருங்க!:)

கீபோர்ட் பக்கத்திலே உட்கார்ந்து பாட்டு கேட்டுகிட்டு இருக்கறேன் நானு! என்ன பாட்டுன்னு நீங்களும் கேக்கறீங்களா? கேளுங்க..


நல்லாருக்குல்ல பாட்டு?? :)

பி.கு.
1.இந்த Ted பய அப்பப்ப இடைல பூந்து முந்திரிக்கொட்டைத்தனமாப் பேசறத யாரும் காதுல போட்டுக்காதீங்க. அவனுக்கு வாட்ச் குடுக்கலன்னு கோவப்பட்டது இன்னும் சமாதானம் ஆகாம இருக்கான்.
2.முதன்முறையா இந்தப் பக்கம் வந்து மொக்கையப் படிக்கறவங்களுக்கு கண்டிப்பா தலையும் புரியாது,வாலும் புரியாது!!:))))அவிங்கள்ளாம் தயவு செய்து டாய்ஸ்டோரி & டாய்ஸ்டோரி-2 இரண்டையும் படிச்சுட்டு இதை மீண்டும் ஒரு முறை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!:)

நன்றி,வணக்கம்!

Monday, November 7, 2011

தேங்காய் பர்ஃபி

தேவையான பொருட்கள்
தேங்காய்த்துருவல்-1/2கப்
(ப்ரெஷ் தேங்காய்த்துருவல் சேர்த்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.)
பால்-1/2கப்
சர்க்கரை -1கப்
நெய்-1டேபிள்ஸ்பூன்
ரோஸ் எஸ்ஸன்ஸ்- 4 துளிகள்
முந்திரி

செய்முறை
தேங்காய்த்துருவல்,பால், சர்க்கரை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கலந்து ஒரு மணிநேரம் மூடிவைக்கவும்.

பாத்திரத்தில் நெய் சூடாக்கி முந்திரியை வறுத்துவைக்கவும்.

அதே பாத்திரத்தில் தேங்காய்-சர்க்கரை-பால் கலவையை ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும்.


கலவை நன்றாக கொதித்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை கிளறி..
இறூதியாக ரோஸ் எஸ்ஸன்ஸ், உடைத்த முந்திரி போட்டுகிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.
பர்ஃபி கொஞ்சம் ஆறியதும், துண்டுகள் போட்டு மேலே முந்திரித் துண்டுகளை பதித்துவிடவும்.
நன்றாக ஆறியதும் பர்ஃபிகளை எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவைக்கவும்.

குல்கந்து வாசனையுடன் தேங்காய் பர்ஃபி சுவைக்கத்தயார்!

Saturday, November 5, 2011

மிக்ஸர்

காராபூந்தி
தேவையான பொருட்கள்
கடலைமாவு-3/4கப்
தண்ணீர் -1/2 கப்
எண்ணெய்
மஞ்சள் food colour -2 துளிகள்

செய்முறை
கடலைமாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
மஞ்சள் கலரையும் மாவுடன் சேர்த்து கலக்கவும்.
மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து பூந்திகளாகப் பொரித்தெடுக்கவும்.
****
ஓமப்பொடி

தேவையான பொருட்கள்
கடலைமாவு-1கப்
அரிசிமாவு-1/2கப்
வெண்ணெய்-1டீஸ்பூன்
பெருங்காயப்பொடி-1/8டீஸ்பூன்
தண்ணீர்
உப்பு
எண்ணெய்

செய்முறை
கடலைமாவு-அரிசிமாவு-வெண்ணெய்-உப்பு-பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் கலந்து கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவுபதத்துக்கு பிசையவும்.
எண்ணெய் காயவைத்து, முறுக்கு அச்சில் சிறிய கண்கள் இருக்கும் தட்டை போட்டு, நேரடியாக ஓமப்பொடியை எண்ணெயில் பிழிந்துவிடவும்.
ஓமப்பொடி பொன்னிறமாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.

***
மிக்ஸர்

தேவையான பொருட்கள்
பூந்தி
ஓமப்பொடி( கைகளால் நொறுக்கிக் கொள்ளவும்.)
மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்-1/8டீஸ்பூன்
உப்பு

எண்ணெயில் பொரிக்க
வேர்க்கடலை -1/4கப்
பொட்டுக்கடலை-1 கைப்பிடி
அவல் -1 கைப்பிடி
கறிவேப்பிலை -2 கொத்து
முந்திரி -10
நசுக்கிய பூண்டு -4பற்கள் (விரும்பினால்)

செய்முறை
எண்ணெய் காயவைத்து பொரிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாகப் பொரித்தெடுக்கவும்.
எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பூண்டு வாசனையுடன் மொறுமொறுப்பான காரசாரமான மிக்ஸர் ரெடி!

காராபூந்தி-ஓமப்பொடி இவற்றை முன்பே பொரித்து வைத்துக்கொண்டால் மற்றபொருட்களை பொரித்து கலந்தால் சிலநிமிடங்களில் சூப்பர் மிக்ஸர் ரெடி!

Wednesday, November 2, 2011

இட்ஸ் பார்ட்டி டைம்! :)

இந்த வருஷ தீபாவளி வாரநாட்களில் வந்ததால் மற்றுமொரு நாளாகத்தான் கழிந்தது. வெள்ளிக்கிழமை டின்னருக்கு எல்லாரும் சந்திக்கலாம்னு முடிவு செய்து மெனு ஃபிக்ஸிங் ஆரம்பித்தோம்..பேசிப்பேசி டின்னர் லன்ச்சாகி, மெய்ன் கோர்ஸ் அபெடைஸராகி ஒரு வழியா ஆளாளுக்கு என்னென்ன ஐட்டம் செய்வது என்று முடிவானது. வெஜ்-சீஸ் பேஸ்ட்ரி வீல்ஸும் சப்பாத்தி இரண்டும் நான் செய்து கொண்டுபோனேன்.

வெஜ் பேஸ்ட்ரி வீல் ரெசிப்பி முதல்லயே போஸ்ட் பண்ணியிருக்கேன். இந்த முறை கொஞ்சம் க்ரேட்டட் செடர் சீஸ்-ஐ வெஜ் மசாலா மீது தூவி சுருட்டிவைத்தேன்,மத்தபடி அதே ரெசிப்பிதான். வியாழன் இரவே வெஜ் மசாலா செய்து, பேஸ்ட்ரி ஷீட்களில் தடவி, சீஸ் தூவி சுருட்டி, க்ளியர் ராப் பேப்பரில் wrap செய்து ஃப்ரீஸரில் வைச்சாச்சு. சப்பாத்திக்கும் மாவு பிசைந்து ப்ரிட்ஜில் வைச்சாச்சு. வெள்ளி காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடித்துட்டு சப்பாத்தி செய்து முடித்துவிட்டு...
ப்ரீஸரில் இருந்து பேஸ்ட்ரி ரோல்ஸை எடுத்து வைச்சா, அரை மணி நேரமாகியும் ரூம் டெம்பரேச்சருக்கு வராம கல்லு மாதிரியே இருக்குது. என்னடா இது வம்பாப்போச்சுன்னு கிட்னிய கசக்கிப் பிழிஞ்சு யோசிச்சு(!) ஒவ்வொரு ரோலையும் பத்திருபது செகன்ட் மைக்ரோவேவ்-ல வைச்சேன். ப்ராப்ளம் சால்வ்ட்!:)
பேஸ்ட்ரி ரோலை துண்டுகளா நறுக்கி மில்க் வாஷ் பண்ணி, bake செய்து எடுத்தாச்சு. எல்லாரும் ஒன்று சேர்ந்து பார்ட்டி நடக்கும் இடம் போய்ச் சேர்ந்தபோது மணி கிட்டத்தட்ட 3. கோபி மன்ச்சூரியன்,பேஸ்ட்ரி வீல்ஸ், டொமட்டோ சூப்,சிக்கன் சூப் இதெல்லாம் சாப்பிட்டுட்டு எல்லாரும் போக்கர் விளையாடி, எர்லி டின்னர் சாப்பிடப்போனோம்.

பட்டர் சிக்கன், சிக்கன் கோலாப்பூரி, மட்டர் பனீர், தால், ஜீரா ரைஸ், சப்பாத்தி, கேரட் ஹல்வா. எல்லாமே வடஇந்திய உணவு வகைகளாவே இருக்குன்னு யோசிக்கிறீங்களா..கரெக்ட்டுதான்! மொத்த க்ரூப்பிலும் நாங்க & இன்னொரு பேச்சலர் பையன் மூணுபேரும்தான் தமிழு..நான் இட்லி0சாம்பார் செய்து எடுத்துட்டு போலாம்னு முதல் மெனுல ப்ளான் பண்ணியது கடைசியில் பேஸ்ட்ரிவீல் &சப்பாத்தில போய் முடிந்தது.

அரட்டையடித்து, விளையாடி, போட்டோஸ் எடுத்து,மிச்சம் மீதியெல்லாம் ஆளாளுக்கு pack பண்ணிக்கொண்டு, பார்ட்டி ஹாலில் இருந்து கிளம்பும்போது பத்துமணியாகிவிட்டது.

தீபாவளி பார்ட்டி ஓவர்! :)

*********^^^^^*********
Mahi..
She is writing very nicely.
Bringing out all topic. She is also having another blog exclusively for kitchen.
But I like to read her other blog.
I like to pass this award to her.
என்று சொல்லி விஜி'ஸ் க்ராஃப்ட்ஸ் ப்ளாகில் இருந்து விஜிம்மா எனக்கு இந்த அவார்டை கொடுத்திருக்காங்க.
என் சமையல் கொடுமைய விடவும் மொக்கை கொடுமைய ரசிச்சுப் படிச்சேன்னு சொல்லவும் ஒரு ஆள் இருக்காங்கங்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு போங்க! :)))))) நன்றி விஜிம்மா! லட்டு சாப்புடுங்க. :)

எல்லாரும் ஸ்வீட் எடுங்க,கொண்டாடுங்க!! :))))[எ.கொ.ச.இ.??!! ஒரு டயலாக் ஃபேமஸ் ஆனாலும் ஆச்சு..எங்கெங்கே யூஸ் பண்ணறதுன்னு வகைதொகை இல்லாமப் போச்சு! ஹிஹி!]

Diwali Dhamaka 2011
பிக்காஸா-வில் போய் எல்லாரும் அவங்கவங்களுக்குப் பிடிச்ச ஸ்வீட்டைச் சாப்புடுங்க,நன்றி!

LinkWithin

Related Posts with Thumbnails